இங்கே நிறைய பேருக்கு விஜய் மேல நடிப்புக்கு அப்பாற்பட்டு பெரிய காழ்ப்புணர்ச்சி இருக்குனு நினைக்கிறேன்
உண்மையை சொன்னா 'வலிமை'யை விட லியோ ஒரு எண்டர்டெயின் மூவிதான். என்ன ஒன்னு அவனுகளே ஏற்படுத்தின "எதிர்பார்ப்பை” அந்த படம் பூர்த்தி செய்யல.
தமிழ் சினிமாவில் "தளபதி” படமும் அப்படித்தான். பாட்டு, ரஜினி ஸ்டில், மம்மூட்டினு ஏக ஹைப். ஆனா படம் வேற மாதிரி இருந்துச்சு. முதல் ஒரு வாரம் தாண்டி படம் மெதுவா கீழே போச்சு. அப்புறம் விமர்சனம் விளம்பரம் எல்லாம் செஞ்சு படம் தப்பிச்சு ஓடுச்சு. லியோ படத்தை பொறுத்த வரை அந்த ஓவர் எதிர்பார்ப்பு தான் பிரச்சினையே.
வெற்றிவிழா கொண்டாடலாமானு கேட்டா ? இன்னைக்கு இருக்கிற காலகட்டத்தில படம் செலவழிச்ச தொகையை எடுத்துட்டாலே அது வெற்றிப்படம்னு ஆகிப்போச்சு. அப்படி பார்த்தா இது வசூலாச்சு. சரி வசூலாகலனு இருக்கட்டும். அதுனால நமக்கு என்ன ? இப்படி பொய்யா சொன்னா தயாரிப்பாளர் இல்லாமே போய்டுவான். அப்படி இல்லாமல் போன நடிகர்கள் இங்கே ஏராளம்.
யூடியூப், ரீல்ஸ், பேஸ்புக்னு ரொம்ப ஒவரா பேசிட்டே இருக்கானுக. விஜய் பட தயாரிப்பாளர்கள் அடுத்து விஜய் கூப்பிட்ட ஓடிப்போய் நிக்கதான் போறாங்க. ஏஜிஎஸ் தான் அடுத்த படம் தயாரிக்குது. சன் பிக்சர்ஸ் கால்ஷீட் வாங்கி வச்சுருக்கு. ஆர் பி செளத்திரி வாங்கி வச்சுருக்காரு. அந்த படங்களை இதே விநியோகதஸ்ர்கள் வாங்க தான் போறாங்க. ஏன்னா அவங்களுக்கு தெரியும்.. சும்மா நாம உக்காந்துட்டு கோடி வசூல், கோடி நட்டம்னு பேசலாம். எந்த படம் காசு எடுக்கும்னு அவங்களுக்கு தெரியும்.
விஜய்னாலா சுறா மாதிரி இருக்கு. துப்பாக்கி அளவுக்கு இல்லைனு வருவாங்க. ஆனா துப்பாக்கிக்கி என்ன எழுதுனாங்கனு பார்த்தா அதும் மொன்னையாதான் இருக்கும்.
இவங்களுக்கு ரசனை எல்லாம் பிரச்சினை இல்லை. விஜய் தான் பிரச்சினை.
முயலை அடிச்சா கறிசாப்பிடலாம். யானையை அடிச்சு என்ன செய்யனு ஒரு அறிவாளி கேட்கிறாரு ? அப்புறம் என்ன கூந்தலுக்கு ஓராயிரம் யானை கொன்றால் பரணினு எழுதி வச்சிருக்கு. அவன் எய்ம் செய்றது பத்தி சொல்றான். அதுவும் வள்ளுவம் சொன்ன கருத்துதான். ஆனா எதிர்ப்பு வெறி முத்திப்போய் விஜய் கலாய்க்கனும்னு ஆகிபோய் இப்படி ஆகிட்டாங்க.
அப்புறம் பாராட்டி பேசுனது, எந்த காலத்தில் சினிமா மேடையில நிஜமா பாராட்டி இருக்காங்க.. எல்லாமே ஓவர் டிராமாதான்... இது எம்ஜியார் காலத்தில இருந்து நடக்குது. அடுத்த பட சான்ஸ், லைம் லைட் வெளிச்சம் ன்னு ஒவராதான் கூவுவாங்க. அது இங்கேயும் நடந்திருக்கு.
சரி, விஜய் அரசியல் ஆசைனு வந்தா. அது அவரோட உரிமை. ரஜினியையே வச்சு செஞ்சு நாடு இது. விஜயை விட்றுமா ? சும்மா ஊராட்சி தேர்த்தல்ல ஜெயிச்ச பிறகு நான் விஜய் மக்கள் இயக்கம்னு சொல்லிகிட்டுது மட்டும் தான் நடக்கும். அதையும் தாண்டி கட்சி ஆரம்பிச்சா என்னாகும். அது அவருக்கும் தெரியும். ஆரம்பிச்சு வரட்டும். அப்ப பேசுவோம்.
அத காரணமா வச்சு விஜயை ஒரு சார்ப்பா கடிச்சி வச்சுகிட்டே இருக்கிறது அவங்களோட இயலாமையை தான் காட்டுது
கருத்துகள்
கருத்துரையிடுக